July 21, 2010

எங்கு தொடங்கி எங்கு முடித்தாய்?

நீ என்னை நெருங்கினாய்,
நான் ஒதுங்கினேன்
உன் தேக ரோமங்கள் தீக்குச்சிகளாயின
உரசியதும் எரிந்தது என் தேகம்
உன் கைவிரல் நகங்கள் குருவாளாய் கீறியதில்
என் நரம்புகள் திசைமாறின

மோகபேச்சில் குளிரூட்டி தேகச்சூட்டை தணித்தாய்
காதுமடல்களிலும் என்னிரு இதழ்களிலும்
உன் கவிதையை வெளியிட்டாய்
என் நெற்றியில் உன் கதை படித்தாய்

வியர்வை முகர்ந்து அயர்வை நீக்கினாய்
போர்வைக்குள்ளும் வெளிச்சம் - உன்
பார்வையின் ஒளியால்


எல்லை மீறுவதும் என்னை கீறுவதும்
சொல்லை மறுப்பதும் கவலை துறப்பதும்
வில்லை எடுப்பதும் அம்பை தொடுப்பதும் என
சகஜமாகின போக போக

பசித்தவர் புசித்ததில் தட்டில் மிச்சமில்லை
பாவமே ஆயினும் துளியும் அச்சமில்லை
என் தேகம் எங்கும் உந்தன் தடங்களே
கட்டிலில் மட்டும் பார பச்சமில்லை


பொதுவாய் கண்களில் தொடங்கி
இதயத்தில் முடியும் இது...
நீ எங்கு தொடங்கி எங்கு முடித்தாய்?


இதுவே கடைசி என, இனிமேல் நடவாது என,
தவறு இழைத்துவிட்டேன் என, மன்னித்துவிடு என,
கைம்பெண் என்பதாலில்லை என,
கேட்பார் இல்லை என்பதாலும் இல்லை என,
நேற்று நீ கூறிய பல சாக்குகள் யாவும் உயிரிழந்தன
இன்று நீ கதவைத் தட்டியதில்..











July 14, 2010

துணி உடமை

என் குரலில் ஒரு சலவை தொழிலாளியின் குறள்.



என்ன துணிங்க? கருமம் துவைத்தப்பின்


இன்னும் போகலை அழுக்கு