April 09, 2008

என்னை கவர்ந்தவை

சென்ற வாரம் விஜய் டிவி "நீயா நானா" வில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த "வெள்ளித்திரை" திரைப்பட இயக்குனர் விஜி அவர்கள் கலந்துகொண்டு பேசியது மிகவும் என்னை கவர்ந்தது (என்னை மட்டும் அல்ல அங்கு இருந்த கோபிநாத் மற்றும் நேயர்கள் அனைவரையும் கவரும் விதமாக பேசியது அதை பற்றி பதிவு செய்ய தூண்டுகோலாக அமைந்தது). அதன் வெளிப்பாடே இந்த தகவல்.

தலைப்பு: வழுக்கைத் தலையைப் பற்றி மக்களின் கருத்து

விஜி: வழுக்கை உள்ளவர்கள் கவலைப்பட தேவை இல்லை. எல்லோருக்கும் இரண்டு கைகள் உள்ளன. இவர்களுக்கு மூன்றாவது கை ஆன "வழுக்கை" உள்ளது என்ற நம்பிக்கையோடு இருங்கள். வழுக்கை என்பது இயற்கை. அதை புரிந்துகொண்டு வாழ்வதுதான்வாழ்க்கைஎன்று அவர் பேசியது எதிர்கால வலுக்கையர்களான என்னை போன்ற மனிதர்களுக்கு (ஆண்களுக்கு) மிகவும் ஆறுதாலக இருந்தது.

மேலும் அவர் பேசியதன் சிறப்பம்சம் என்னவென்றால், தன் படமான "வெள்ளித்திரை"யில் வழுக்கை என்ற வார்த்தையை பிறரை புண்படுத்தும் விதமாக உபயோகப்படுதியதற்காக தன்னையும் மன்னிக்குமாறு கேட்டுகொண்டது கேள்விகளுக்கு இடமில்லாமல் பாராட்டுதலுக்குரியது.

என்ன சொல்கிறீர்கள் ?




குறுஞ்செய்தி கவிதைகள்

புரியாத பிரியம்
பிரியும் போது புரியும்
- பெயரில்லை

தமிழில் ஒரு ரீபஸ்

"ஜீன்" கள்:-

உதாரணம்:- ஆடு, மாடு, கோழி, நாய், பன்னி ஆகியவை "ஜீன்" கள் ஆகும்

பதில்:
"வ" இல்லா (வாயில்லா) ஜீவன் - ஜீன்


முயல்+ஆமை

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
முயலாமை என்றும் வெல்லாது
- பெயரிலி