July 30, 2009

சரண்கிட்ட மோதாதே!!! சரண்கிட்ட விளையாடாதே!!!

எல்லா ஞாயிறும் போல இல்ல கடந்த ஞாயிறு (It is not just another sunday).
மணி 4:00:
நண்பன்-1:டேய் எங்கயாவது போவோம்-ன்னு எத்தன தடவடா சொல்லறது.
நண்பன்-2:லேய், படம்-னா சரண் படம் மோதி விளையாடு ரிலீஸ் ஆயிடுச்சு அதுக்கு போவோம்.
நான்: எனக்கு எங்க-ன்னாலும் சேரி டா.
ந-1: டேய், வேலு பிரபாகரனோட காதல் கதை போவோம் டா. "புரட்சி"கரமா இருக்கும்.
நா: ஆமா அதுக்கே போவோம். மோதியாவது... ஜாதியாவது..
ந-௨: அட வெண்ணைகளா!!

இப்டியே பேசி வழக்கம் போல டைம் பாஸ் பண்ணிருந்தா கூட வருத்தம் இல்ல. ஆனா கடைசியா சரண் படத்துககீ போலாம்-னு முடிவு பண்ணி மூஞ்சி கழுவி, சினி மூடுக்கு வந்து, ஆளுக்கு ஒரு கலர்ல த-ஷர்ட் எடுத்து மாட்டிக்கிட்டு, புதுசா வாங்குன சோனி ericsson-ல door-கிட்ட நின்னு சில கிளிக்க்ஸ், ரோடு-ல நின்னு சில கிளிக்க்ஸ், வழியில வந்த ஆட்டோ-ல ஏறி, விவேக்நகர் பாலாஜி தியேட்டர் ன்னு சொல்லி ஏறி உக்காந்து watch பாத்தா மணி 5:00

மணி 5:20: தியேட்டர் வாசலில் ஆளரவம் இல்லா இடத்தை பார்த்து 5 நிமிட யோசனை மற்றும் சஞ்சலம்
ந-1: காட்சி நேரம் 6:15

கோவிலுக்கு போக, கோவில் பூட்டி இருக்க, எதிரில் ஐஸ் கிரீம் சாப்பிட, Batra ஹேர் ஆயில் apply பண்ண பஞ்சு வாங்க, மறுபடியும் சில கிளிக்க்ஸ், டிக்கெட் வாங்க, ன்னு எப்டியோ மணி 6:00 ஆயிடுச்சு.

15 நிமிஷம் மூக்க பொத்திட்டு தியேட்டர் க்கு உள்ள உக்காந்து இருந்தோம். A/C on பண்ணாததால ஒரே புழுக்க வாடை..

மணி 6:15 to 8:55: Official Caveat: Children, Senior Citizens, Those with light-hearts are advised not to see the film and also not to read the below lines!!!


வினய் பணக்கார அப்பாவுக்கு (கலாபவன் மணி) ஒரே புள்ள. as usual அம்மா இல்ல. வினய் கூட மதன்னு ஒரு பையன் (கலாபவன் மணியோட sponsor பையன்). படம் ஆரம்பிச்ச வொடனே வினய் பத்தி, மதன் பத்தி, வினய் யின் body guard Alse, நண்பர் சந்தானம், heroine காஜல், அவளோட தோழிகள் பத்தி முகம் தரியாத யாரோ ஒருத்தர வச்சு சொல்லறது, ஒபேனிங்-ல கில்மா சாங் வைக்குறது, ஹெலிகாப்டர் காட்றது, ... அலுத்து போச்சு.. இருந்தாலும் அதையாவது சுவாரஸ்யமா செய்யலாம்ல.. இல்ல. படத்துல கதை இல்லாததால,மற்ற அம்சங்களை பாக்கலாம்.

நம்ம வினய் ஒரு ______. அவருக்கு ஒரு bodyguard! ஒரு friend! ஒரு housemate, ஒரு காதலி.

அப்பா ஒரு இம்சை அரசன். இவர் பேச ஆரம்பிச்சா அவரோட employees காதை பொத்திக்குவாங்க (நாமளும் தான் ). டயலாக்-ஆ பேசி torture பண்றது கலாபவன் trend ன்னு ஆயிடுச்சு. தன் மகனை கவனிக்குரதுல, பிசினஸ் மேனேரிசதுல, intervalukku அப்புறம் இறந்தது சொந்த மகன் மதன், வினய் தான் தத்து பையன் ன்னு உண்மைய reveal பண்ணும்போதும், டேய் நிறுத்துங்கடா உங்க இம்சைய ன்னு கத்த தோனுது... பக்கத்துல இருந்த ந-1 seat நுனியில உக்கார்ந்து இருந்தார்(தலையில கைய வச்சுக்கிட்டு, அழுகாத குறையா).

கதை-ல ஒரு வித்யாசமான(????) அம்சம் இருக்கு. வினய்யும் காஜலும் மீட் பண்றது ஒரு accident-ல. வினய் ferrari ஒட்டி போயற்றுக்கும்போது, காஜல் காலி coke பாட்டில்-ல தூக்கி போட, அது வினய் மேல விழ, கார் ஒரு கம்பி-ல மோதிடுது. 3 lakhs ஈஸ்டிமடே போட்டு, கஜாலாட்ட காசு கேக்குறாரு.
கொடுக்க முடியாத(பாவம் ஆண்டவன் ஏழைகளையே ஏன் சோதிக்கிறான் தெரியல) கஜாலா, வினய் போட்ற அக்ரீமேன்ட்கு ஒதுக்குகிறார். அது என்னன்னா 300,000 க்கு வீட்டு வேலை செஞ்சு காச கழிக்கணும். இந்த சரண... சரி விடுங்க..

இதுல என்னடா பெரிய அம்சம் ன்னு சொல்றீங்களா?, அவ துணி தொவைக்க, வீடு கூட்ட, சமையல் பண்ண, கொஞ்சம் கொஞ்சமா காசு கழியும் போது ஸ்க்ரீன்-ல 300,000 க்கு மீதம் எவ்ளோ இருக்குன்னு ஒரு டிஸ்ப்ளே வருது... இந்த technique இந்த படம் பாக்க வர்றவங்களுக்கும், அவங்க பொறுமைக்கும் apply ஆகும். ஒரு மனுஷனுக்கு பொறுமை 100 % ன்னு வச்சுக்குவோம் (சத்தியமா எனக்கு இல்ல).

first பாட்டுல பொறுமை 5% குறையுது (மீதம் - 95%). அவங்களோட இந்த அக்ரீமன்ட் லாஜிக் அது பங்குக்கு 10% -ஐ முழுங்கிடுச்சு (மீ- 85%). கலாபவன் மணி, அவன் இம்சையான நடிப்பு 71/2 % (மீ-77.5% ) . கூட வர்ற மதன் ஏதோ மியூசிக் சேனல் compairer மாறி t-ஷர்ட், அறை தாடி, கலஞ்ச ஹேர் ஸ்டைல், மாநிறம், தூங்குன மூஞ்சி, பீடி இழுத்து துருபுடிச்ச உதடு (நன்றி - வைகை புயல்), குறு குறு பார்வையுடன் வந்து, மொக்கையும் போட்டு மண்டையும் போடுகிறான்.
இவரது பங்கு 9% (மீ - 68.5 %). சந்தானம் வழக்கம் போல கிச்சு கிச்சு மூட்டுகிறார், (tickling the funny bone), அப்டியெல்லாம் சொல்லறது பழசு, இந்த படத்துல சொல்ல போனா நம்ம பொறுமையை இன்னும் கொஞ்சம் கூட்டுகிறார். so நம்ம பொறுமை balance 10% increase ஆகுது (மீ - 78.5%). ஆ ஊ ன்னா ஹெலிகாப்டர் காட்டுனதுக்கு 10%, மயில்சாமி 7.5%, Haneefa 10%, காஜல் அப்பா 4%, அவங்க அம்மா 1%, காஜலோட பல்நாட்டு 5 friends ஆளுக்கு 2%, சம்பந்தமே இல்லாம வர்ற மோதி விளையாடு பாட்டு 5% - ஐ குறைச்சாலும், பாட்டு ஹிட் ஆனதால +5% கூட்டி நம்ம பொறுமைய 35% -ல வந்து நிறுத்துது..

இப்போ technicians பங்கு:

colonial cousins - 8%
S.ராமகிருஷ்ணன் - 6%( இவர் பாபா, ஜி, சண்டகோழி பட வசன கர்த்தா. இந்த படத்துக்கு கதையும் எழுதியிருக்கார் )
background மியூசிக் - 0%,
மட்டமான புளிச்சுப்போன screenplay - 7%

மீதம் இருக்குற 14% பொறுமையும் 14-வது ரீல்-ல பலூன்-ல ஊசி குத்துன மாதிரி காத்தோட கலந்து கரைஞ்சுடுது.

interval-ல வெளிய ஒரு நண்பர் சொன்னது இந்த படத்துக்கு இரு "வரி" திருக்குறள் விமர்சனம்.. "இந்த சினிமாகாரனுங்க வருமான வரி பிரச்சனைக்கு நாமலாடா கெடைச்சொம்" . S.ராமகிருஷ்ணன் -கூட இந்த படத்துல இப்டி ஒரு வசனம் எழுதல.

இருவரி ரொம்ப காஸ்ட்லி விமர்சனம்-ன்னு பீல் பண்றவங்களுக்கு இந்த படத்துல வர்ற ஒரு டயலாக்-ஐயே ஒரு வரி விமர்சனமா இந்தா எடுத்துக்கோங்க .. " உண்மைய சொன்னா இந்த படம் ஒரு பொய்".

June 27, 2009

'பருவ' மாற்றம்

ஒரு வழியா நேரம் வந்துருக்கு அடுத்த பதிவுக்கு (உண்மைய சொன்னா மனசுவந்துருக்கு -ன்னு சொல்லணும்). இது நடிகர் கமல் எழுதிய ஒரு கவிதையைப் படிச்சுட்டு ஒரு வேகத்துல்ல எழுதுனது

'பருவ' மாற்றம்

யாரென்று அறியாமை - வெயில் தெளிக்கும் வானம்
முதல் சந்திப்பு - மேக மூட்டம்
பார்வை பரிமாற்றங்கள் - வாடை காற்று
பரஸ்பர புன்னகை - தூவானம்
அலைபேசி உரையாடல்கள் - மழை
காதல் கொள்தல் - பெருமழை
புரியாத முதல் உணர்வுகள் - மடை உடைக்கும் பெருவெள்ளம்
காமப்பெருக்கு - புயல்
இறுதியில் அடங்கினான் - புயலுக்குப்பின்னான அமைதி
மறுபடியும் வெயிலடிக்க தொடங்கியது.. இம்முறை சுட்டது வானமல்ல.. அவள்..