May 08, 2017

வாழ்வதெல்லாம் வீழ்வதில்லை
வீழ்வதெல்லாம் விதைகளில்லை
விதைகளெல்லாம் முளைப்பதில்லை
முளைப்பதெல்லாம் செடிகளில்லை
செடிகளெல்லாம் பூப்பதில்லை
பூக்களெல்லாம் காய்ப்பதில்லை
காய்களெல்லாம் கனிவதில்லை
கனிவதெல்லாம் ருசிப்பதில்லை
ருசிப்பதெல்லாம் ரசிக்கப்படுவதில்லை
ரசனையெல்லாம் உண்மையில்லை
உண்மையாவும் வாழ்வதில்லை
வாழாவிடினும் வீழ்வதில்லை

- கணேசன் 

May 30, 2012

ஒரு கலர்புல் மேட்டர்

"அந்த" மாதிரி படத்துக்கு நீலபடம்-னு சொல்றாங்க

"அந்த" மாதிரி பேசுனா பச்சையா பேசுற-னு சொல்றாங்க

"அந்த" மாதிரி எடத்துக்கு சிவப்பு விளக்கு ஏரியா-னு சொல்றாங்க

"அந்த" மாதிரி புக்-ஐ மஞ்ச பத்திரிக்கை-னு சொல்றாங்க

"அந்த" மாதிரி நடந்துகிட்டா அரக்கன்-னு சொல்றாங்க

"அந்த" மாதிரி எல்லாம் பண்ணா முன்னாடி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்துறாங்க



ஆனா, "அந்த" மாதிரி எல்லாம் இல்லாம நல்லவனா இருந்தா "வெள்ளை" மனசு-னு சொல்வாங்க



March 22, 2011

பார்த்தான்

1
 
ன்      பா
தா     ர்
த்       த்
ர்        தா 
பா     ன்

....

 
பார்த்தான் 
_____________

பார்த்தான்
 
...

March 09, 2011

இல்லாள்

இல்லாள் இல்லா இல்லெல்லா மொரு இல்லா?? 
இல்லவே இல்லை..

என்றாவது



உன் கண்ணுக்கு மை தீட்டியே 
இன்னும் கருமை ஆனது 
ஐ-ப்ரோ பென்சில் 




நீ சுமந்து சுமந்தே 
இன்னும் வளைந்தது 
உன் வீட்டு குடம்





நீ கடிக்கவேண்டும் எனவே 
இன்னும் வேகமாய் நீளமாய் 
வளர்கிறது உன் நகங்கள்



நீ செல்லமாய் (காதை) திருகுவாய் எனவே
அடிக்கடி தவறிழைக்கிறது
உன் கை கடிகாரம்


நீ சீவி விடுவாய் என்றே 
அம்மா எடுத்த வகிடை 
தினமும் களைத்து வருகிறான் 
என்னை போன்ற எதிர் வீட்டு  சிறுவன்




நீ என்றாவது கடன் கேட்பாய் எனவே
என்றுமே கூடுதலாய் ஒரு பேனா எடுத்து வருகிறார்கள்
என்றும் அது நடவாது என்பதை அறியாமலே
என் சக நண்பர்கள்




நானும் என்றாவது நீ படிக்கவே இதையும் எழுதுகிறேன்..



உறக்கம்

வரும் வரை உன்னையே நினைக்கிறேன் ..
வந்தபின் என்னையே மறக்கிறேன்..
உனக்கு மறு பெயர்  என்ன உறக்கமா?
 
 

July 21, 2010

எங்கு தொடங்கி எங்கு முடித்தாய்?

நீ என்னை நெருங்கினாய்,
நான் ஒதுங்கினேன்
உன் தேக ரோமங்கள் தீக்குச்சிகளாயின
உரசியதும் எரிந்தது என் தேகம்
உன் கைவிரல் நகங்கள் குருவாளாய் கீறியதில்
என் நரம்புகள் திசைமாறின

மோகபேச்சில் குளிரூட்டி தேகச்சூட்டை தணித்தாய்
காதுமடல்களிலும் என்னிரு இதழ்களிலும்
உன் கவிதையை வெளியிட்டாய்
என் நெற்றியில் உன் கதை படித்தாய்

வியர்வை முகர்ந்து அயர்வை நீக்கினாய்
போர்வைக்குள்ளும் வெளிச்சம் - உன்
பார்வையின் ஒளியால்


எல்லை மீறுவதும் என்னை கீறுவதும்
சொல்லை மறுப்பதும் கவலை துறப்பதும்
வில்லை எடுப்பதும் அம்பை தொடுப்பதும் என
சகஜமாகின போக போக

பசித்தவர் புசித்ததில் தட்டில் மிச்சமில்லை
பாவமே ஆயினும் துளியும் அச்சமில்லை
என் தேகம் எங்கும் உந்தன் தடங்களே
கட்டிலில் மட்டும் பார பச்சமில்லை


பொதுவாய் கண்களில் தொடங்கி
இதயத்தில் முடியும் இது...
நீ எங்கு தொடங்கி எங்கு முடித்தாய்?


இதுவே கடைசி என, இனிமேல் நடவாது என,
தவறு இழைத்துவிட்டேன் என, மன்னித்துவிடு என,
கைம்பெண் என்பதாலில்லை என,
கேட்பார் இல்லை என்பதாலும் இல்லை என,
நேற்று நீ கூறிய பல சாக்குகள் யாவும் உயிரிழந்தன
இன்று நீ கதவைத் தட்டியதில்..